வரலாறு

|

திருப்பணிகள்

|

கோவில்கள்

|

புள்ளிகள

|

பேருந்து
நேரங்கள

|

பஞ்சாயத்து

வரலாறு

வரலாறு

மிதிலைப்பட்டி வரலாறு

செந்தமிழும் செல்வமும் சிறந்தோங்கும் தெய்வ அருள் நிறைந்த ஊர் மிதிலைப்பட்டி. காடும் மலையும் கலந்தினிது அமையத் திகழும் அமைதியான ஊர். மிதிலைப்பட்டி. இவ்வூர் மேலப்பத்தூர் வட்டகையை சிறந்தது. நாட்டுக் கோட்டை நகரத்தார் தொன்று தொட்டு இன்று வரை சிவநெறியிலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கும் சமூகமாகும். கல்வாசல் நாட்டுக்கு கட்டுப்பட்ட கீரணிப்பட்டி முத்துமாரியம்மண் கோவிலை கொண்டாடி வருகின்றனர். மிதிலைப்பட்ட என்பதே பொருத்தமான பெயர். நாள்தோறும் இடம் தோறும் வேள்வி செய்து வேதம் செய்த வேதம் ஓதிய சனகனுடைய புண்ணிய பூமியின் பெருமையை உணர்ந்து இவ்வூருக்க இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்றும் ராமாயண தாக்கிட்டால் மிதிலைப்பட்டி என்றும் வழக்கில் மக்கள் கூறுகின்றனர்.
 

    

திருமலை நாயக்கருக்கு உட்பட்ட சிற்றூர் ஆட்சியினை மேற்கொண்ட தலைவர்களில் ஒருவர் வெங்களப்ப நாயக்கர் இவரின் வள்ளன்மை கண்ட அழகிய சிற்றம்பல கவிராயர் இவர்மீது "வெங்களப்ப நாயக்கர் குறவஞ்சி" என்ற நூலை பாடினார். குறவஞ்சி பாடலின் பெருமையை உணர்ந்த வெங்களப்ப நாயக்கர் கவிராயருக்கு தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மிதிலைப்பட்டி பகுதியை சாலிவாகன சகம் 1570 (கிமி 1948ம் ஆண்டு) முற்றூட்டாக கொடுத்தார். ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை இவைகளின் முழு பாடல் ஏடுகளும் கவிராயர் குடும்பத்தினரிடமிருந்து தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் பெற்றுக் கொண்டார். அதனால் மிதிலைப்பட்டி ஊரை "தமிழ் தாயின் திருக்கோவில்" என்று உ.வே.சாமிநாதய்யர் பாராட்டி உள்ளார்.
 

மிதிலைப்பட்டி நகரத்தார்கள் முன்பு அருகில் இருக்கும் திருக்கோளக்குடியில் வசித்து வந்தவர்கள் கவிராயர்கள் கேட்டுக் கொண்டதற்கினங்க மிதிலைப் பட்டியில் அவர்களால் கட்டப்பட்ட ஆவுடைநாதர் சிவயோக வல்லி திருக்கோவிலை கவிராயர் குடும்பத்தின் வேண்டுகோளின்படி நகரத்தார்கள் கல் திருப்பணியாக கட்டி 29.1.1940 முதல் கும்பாபிசேகம் நடைபெற்றது. பின்பு கவிராயர் குடும்பத்தாரிடம் மிதிலைப்பட்டி ஊரின் பகுதியை நகரத்தார்கள் விலைக்கு வாங்கி கோட்டை போல் வீடுகளை கட்டி நகரத்தார்கள் சிறப்பாக வாழ்ந்து வருகிறாகள்.


 

தற்போதய மிதிலைப்பட்டி புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சி மிதிலைப்பட்டி ஊர் வளர்ச்சி கருதி மிதிலைப்பட்டி நகரத்தார்களின் பிரதிநிதிகளால் புதுக்கோட்டை சமஸ்தானத்திலிருந்து 1911ம் ஆண்டு அக்டோபர் 10ம் நாள் கிரயமாக பெறப்பட்டு ஆவுடையநாதர் சிவயோக வல்லி ஆலயத்தில் குடிகொண்டுள்ள அம்மன் பெயரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பகுதி சிவயோகபுரம் இருபதாம் நூற்றாண்டின் இடையில் இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் சிவயோகபுரம் ராங்கியம் ஊராட்சியில் இணைக்கப்பட்டது.

 

வணிகம் :

நமது ஊர் நகரத்தார்கள் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை, செய்கோன், முதலிய நாடுகளுக்கு சென்று வணிகம் செய்தனர். உள் நாட்டிலும் எல்லா மாநிலங்களிலும், இருந்து வருகிறார்கள். காலத்தின் மாற்றத்தினால் பர்மா வீழ்ச்சியடைந்த பிறகு நகரத்தார் சமூகத்தை சேர்ந்த மிதிலைப்பட்டி நகரத்தார்கள் உலகில் பல்வேறு நாடுகளிலும் வேலை நிமிர்த்தமாக சென்று வசித்து வருகிறார்கள்.

 
 Copyright 2009. All rights reserved by www.mithilaipattinagarathar.com

Powered @ SPEED Multimedia