|
சிவயோக புரத்தில் (மெட்டில்)
மு. வயி. கரு. ராமசாமி செட்டியார் அவர்கள் இடமும் அதில் கிணறும் வெட்டி
கட்டிடங்களும் கட்டி திருமயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு நன்கொடையாக கிரையம்
செய்து கொடுத்து மேற்படி ஒன்றிய நிர்வாகத்தால் தொடக்கப்பள்ளி நல்ல முறையில்
நடந்து வருகிறது.
திருமதி.வயி. உமையாள் ஆச்சி அவர்களிடம் மக்கள் பங்கு தொகையை நன்கொடையாக
பெற்று நிறுவப்பட்ட மிதிலைப்பட்டி ஊராட்சி மன்ற மேல்நிலை நீர் தேக்க
தொட்டியிலிருந்து குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீரும்
கிடைக்கிறது. சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்ட பகுதியிலும் ஒரு மேல் நிலை
தேக்க தொட்டி இயங்கி வருகிறது.
இரவில் இருளகற்றி பயம் போக்க ஒளி தரும் தெரு டியூப் லைட்டுகள் 33 அனைத்து
டியூப் லைட் பிட்டிங்குகளும் நகரத்தார்கள் மிதிலைப்பட்டி ஊராட்சிக்கு
நன்கொடையாக கொடுத்தவைகள். முன்பு
வெ.லெ.வெ. குடும்பத்தாரும், மு.வயி.கரு.ராம.குடும்பத்தாரும் கூட்டமாக தெரு
விளக்குகளும் மின் கட்டணமும் கட்டி வந்தார்கள்.
ஊருக்கு மேற்கே உள்ள செட்டியார் ஊரணியும் கிழக்குகரையில் மு.வயி.கரு.ராமசாமி
செட்டியார் அவர்களால் கட்டபட்ட வினாயகர் கோவிலும் அமைந்திருக்கிறது. |