Welcome to :: www.mithilaipattinagarathar.com ::

வரலாறு

|

திருப்பணிகள்

|

கோவில்கள்

|

புள்ளிகள

|

பேருந்து
நேரங்கள

|

பஞ்சாயத்து

திருப்பணிகள் :
மாத்தூர் கோவில்
பிள்ளையார் பட்டி
இளையற்றங்குடி
இரனிக்கோவில்
மாத்தூர் கோவில் நகரத்தார் திருப்பணிகள் :

1.ந.பழ.குடும்பத்தார்கள்(மாத்தூர்) முந்தய ஊராண திருக்கோளக் குடியில் ந.பழ.முத்தையா செட்டியார் அவர்களால் வினாயகர் கோவில் கட்டப்பட்டது.

2.சிவன் கோவிலுக்கு பக்கத்தில் வட கிழக்கில் ந.பழ.குடும்பத்தார் அவர்களால் கட்டி நகரத்தார்களிடம் ஒப்புவித்த பொய்யாமொழி பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது.

3.பிள்ளையார் கோவிலை தொடர்ந்து வடக்கில் ந.பழ.குடும்பத்தாரால் 1927-ல் கட்டப்பட்ட ஆவுடையார் ஊரணி இருக்கிறது.

4.ராமநாதன் செட்டியார் மேற்படியார் மகன்கள் R.M.வள்ளியப்பன், மேற்படியார் தம்பி ராம வள்ளியப்பா அவர்களால் தங்கள் அப்பதாள் நினைவாக வள்ளியம்மை ஆச்சி இலவச திருமண மண்டபம் கட்டி ஏழை எளியவர்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறார்கள்.

5.R.M.வள்ளியப்பன், மேற்படியார் தம்பி ராம வள்ளியப்பா அவர்களால் தாயார் நினைவாக மீனாட்சி ஆச்சி இலவச தையல் பள்ளி நடத்தப்பட்டு வருகிறார்.

6.மேற்படியார்களால் நந்தவண‌மும் நடத்தப்பட்டு வருகிறது.

7.மிதிலைப்பட்டி மெட்டு பகுதியில் மேற்படி ராமநாதன் செட்டியார் மகன்கள் R.M.வள்ளியப்ப செட்டியார் ராம.வள்ளியப்பா அவர்களால் பஞ்சமுக வினாயகர் ஆலயம் அமைத்து நித்திய பூசை நடைபெற்று வருகிறது.

8.ந.பழ.சித.மு.ந. நல்ல கருப்பன் செட்டியார் அவர்கள் மனைவி மீனாட்சி ஆச்சி பெயரில் ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் கட்டிடம் கட்டி மீனாட்சி சிவலிங்கம் நடுநிலை பள்ளியை ஆரம்பித்து அரசாங்கத்திடம் ஒப்படைத்து அது நல்ல முறையில் நடந்து வருகிறது. அவர்கள் ஸ்தாபகர் என்ற முறையில் கல்வி ஆண்டு துவங்கியதும் ஏழை மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கியும் வருகிறார்கள். மேலும் ந.பழ.சித.பழ குடும்பத்தாரால் பழைய பெருமாள் கோவில் கட்டப்பட்டது.

9.ராமநாதன் செட்டியார் மேற்படியார் தம்பி சிதம்பரம் செட்டியார் அவர்களும் சிவன் கோவில்  தழுகைக்காக நிலங்கள் நகைகள் வாங்கி கொடுத்திருக்கிறார்கள். இராக்கால உபயமும் தொன்று தொட்டு அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

க.யே.குடும்பத்தார்கள்(மாத்தூர்)

10.மிதிலைப்பட்டி மெட்டு என்னும் பகுதியில் க.யே. குடும்பத்தாரால் கட்டப்பட்ட சித்தி வினாயகர் கோவிலும் ஊரணியும் அமைந்திருக்கிறது.

11.க.யெ.பழ.சுப. சேக்கப்பன் செட்டியார் அவர்களின் பசு மடமும் ஊரணிக்கு வடகரையில் அமைந்திருக்கிறது.

12.பொய்யாமொழி பிள்ளையார் கோவிலுக்கு கிழக்கே குருபூசை மடம் உள்ளது. க.பெ.அ.ராம சேது செட்டியார் குடும்பத்தினரும் ஆத.சோம.சேது செட்டியார் அவர்கள் குடும்பத்தினரும் சேர்ந்து அப்பர் சம்மந்தர் மாணிக்க வாசகர், சுந்தர மூர்த்தி நாயன்மார்களுக்கு அவரவர் நட்சத்திரத்தன்று முறையே சித்திரை மாதம் சதயம், வைகாசி மாதம் மூலம் ஆணி மாதம் மகம் ஆடிமாதம் சுவாதி ஆகிய நாட்களில் குருபூசை நடத்தி வருகிறார்கள்.

 

 Copyright 2009. All rights reserved by www.mithilaipattinagarathar.com

Powered @ SPEED Multimedia