|
1. மெட்டுக்கு வடக்கே கரடியான் குளத்திற்குக் கிழக்கே
வெ.லெ.வே.வேலாயுதம் செட்டியார் அவர்கள் குடும்பத்தினர் சிந்தாமணி
பிள்ளையார் கோவிலும் குடிநீர் ஊருணியும் கட்டியுள்ளார்கள். அப்பகுதி
மக்கள் இந்த
நன்னீர் ஊருணியால் பெரிதும் பயனடைகிறார்கள்.
2.நகரத்தார் முதியோர் இல்லம் ஒன்றும் நகரத்தார் பாதுகாப்பு பெட்டக
வசதியும் திரு.வேலயுதம் செட்டியார் அவர்கள் பேரன் லெட்சுமணன் செட்டியார்
அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
3.ஆவுடைநாதருக்கும் சிவயோக வல்லி
அம்பாளுக்கும் தினமும் வேண்டுவது பூவும் பாலும் அவைகளைச் செய்வதும்
பழ.ப. குடும்பத்தார் அவர்களின் நந்தவனம் உள்ளது.
4.பழ.சுப.சுப்பையா செட்டியார் அவர்களால்
கட்டப்பட்ட வரத ராஜ பெருமாள் கோவிலும் அதற்கு ஊரணி ஒன்றும் கட்டி
அமைத்து புரட்டாசி மாதம் நவராத்திரியும் மார்கழி மாதம் வைகுண்ட
ஏகாதசியும் மற்றும் வைணவ திருவிழாக்களும் நடைபெற்று வருகிறது.
|